வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி:
VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை போட்டோவாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும் உங்களுக்கு பிடித்த காட்சி போட்டோவாக உங்கள் கணினியில் சேமிக்க பட்டுவிடும்.
snapshot
எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும். மற்றும் போட்டோ சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.
எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும். மற்றும் போட்டோ சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.
Snapshot பார்மட் மாற்ற :
டீபால்டாக png பார்மட்டில் உங்களுடைய Snapshot சேமிக்க ப்படும். இதனை JPG பார்மட்டிற்கு மாற்ற விரும்பினால் Tools - Preferences - (or) Ctrl+P கொடுத்து
வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு செய்யவும். அதில் Snap shot
பகுதியில் போட்டோ பார்மட்டை மாற்றி Apply பட்டனை அழுத்துங்கள்.
ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க:
ஒரே கிளிக்கில் snapshot
எடுக்கும் வசதி வேண்டுமெனில் View - Advanced Controls தேர்வு செய்தால்
கீழே சில பட்டங்கள் தெரியும் இரண்டாவதாக உள்ள Camera ஐக்கான் பட்டனை
அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை பெறலாம்.
மேலே உள்ள முறைகளை பயன்படுத்தி VLC பிளேயர் மூலம் சுலபமாக வீடியோவில் இருந்து Snapshot எடுத்து கொள்ளலாம்.
0 $type={blogger}:
Post a Comment