728x90 AdSpace

Sunday, July 22, 2012

அழித்த பைல்களை மீட்க..........

கொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் வரும். தேவையான ஃபைல்களை சில நேரங்களில் நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம்.
அவை ரிசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை பயன்படுத்தி றீ சைக்கிள் பின்னுக்கு செல்லாமல் சில பைல்களை அழித்துவிடுவோம். பின்னர் அதற்காக வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட ஃபைல்களை எடுத்து தருவதற்கு என்று பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாக கொம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது.
அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover files இது கிடைக்கும் தளத்தின்
முகவரி சுட்டி 
றீ சைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் மீட்டு விடலாம்.
மிகச்சிறிய, ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 $type={blogger}:

Post a Comment

Item Reviewed: அழித்த பைல்களை மீட்க.......... Rating: 5 Reviewed By: The life