728x90 AdSpace

Tuesday, July 24, 2012

விளையாடலாம் வாங்க! பசுமாட்டின் அட்டகாச விளையாட்டு - Supercow


சிறையிலிருந்து தப்பிய ஒரு பேராசிரியர் ஒரு சின்ன கிராமத்தின் விலங்குகளை எல்லாம் பிடித்துக்கொண்டு அவற்றை பலமடங்காக குளோன் செய்து பூமியை அழிக்க திட்டமிடுகிறார். இச்செய்தியை கேள்விப்பட்ட Supercow என்ற பசுமாடு பேராசிரியரை அழிக்க முயற்சி செய்கிறது. இப்போது உங்கள் கைகளில் Supercow. விளையாட சுவாரசியமான இந்த விளையாட்டின் அளவு 78 MB தான்.

இதில் மொத்தம் 10 stage களும் அதில் நிறைய நிலைகளும் (levels) உள்ளன. இதும் ஒரு வகை Arcade விளையாட்டு தான். ஒவ்வொரு நிலையிலும் பல சுவாரசியங்கள் உள்ளன. சிலவற்றில் கதவை கண்டுபிடிப்பதும் சிலதில் சிறிய எதிரிகளை கொள்வதும் குப்பைகளை அழிப்பதும் என்று உற்சாகமாக சிறுவர்களை விளையாட செய்யும்.


இதில் நத்தை, நாய், காகம், தவளை, சிலந்தி போன்றவைகள் தான் உங்கள் எதிரிகள். மேலும் சில பொருள்கள் ரகசியமாய் வைக்கப்பட்டிருக்கும். அவற்றையும் போகிறபோக்கில் கண்டுபிடித்தால் ஸ்கோர் ஏறும். இறுதியில் அந்த பேராசிரியரை கொன்றாக வேண்டும்.

குறுக்குவிசைகள் (Shortcut keys)

left ->move left
Right-> move right
up -> jump up
down -> jump down
shift -> jump and kill

தரவிறக்கச்சுட்டி: Download Supercow (78 Mb)
Portable version download (28 Mb)
  • Blogger Comments
  • Facebook Comments

0 $type={blogger}:

Post a Comment

Item Reviewed: விளையாடலாம் வாங்க! பசுமாட்டின் அட்டகாச விளையாட்டு - Supercow Rating: 5 Reviewed By: The life