728x90 AdSpace

Sunday, July 22, 2012

திரை அசைவுகளை வீடியோவாக படம் பிடிக்கும் CamStudio

கணினித் திரையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அதனை ஒரு வீடியோ பைலாக உருவாக்கித் தரக்கூடிய ஒரு மென்பொருளே கேம்ஸ்டுடியோ, இது ஒரு இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் திரை நடவடிக்கைகளை மாத்திரமன்றி கூடவே அதனுடன் ஒலியையும் பதிவு செய்துகொள்ளலாம். கேம்ஸ்டுடியோவில் என்னென்னவசதிகள் உள்ளன?

கணினித் திரையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அதனை ஒரு வீடியோ பைலாக உருவாக்கித் தரக்கூடிய ஒரு மென்பொருளே கேம்ஸ்டுடியோ, இது ஒரு இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் திரை நடவடிக்கைகளை மாத்திரமன்றி கூடவே அதனுடன் ஒலியையும் பதிவு செய்துகொள்ளலாம்.

*  AVI  வீடியோ பைலை ப்ளேஸ் ப்ளேயரில் இயங்கத்தக்க SWF பைலாக மாற்றிக்கொள்ளலாம்.
* உருவாக்கும் வீடியோ படங்களுக்கு ஒலிவாங்கி அல்லது ஒலிபெருக்கி மூலம் ஒலியை இணைக்கலாம்.
* வீடியோ படங்களுக்குத் தலைப்பி டலாம். குறிப்புகளை வழங்கலாம்.
* உருவாக்கும் வீடியோ பைலை திகதி மற்றும் நேரத்தை பைல் பெயராகக் கொண்டு தானாகவே சேமித்துக்கொள்ளலாம்.
* வீடியோ பைலின் தரத்தைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ முடியும். வீசீடி அல்லது டீவிடியில் பதிவு செய்வதற்கான உயர் தரத்திலான வீடியோவையும் ஈமெயிலில் அனுப்பக்கூடியவாறான சிறிய பைல் அளவு கொண்டதாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.
* திரை முழுவதையும் அல்லது திரையில் விரும்பிய ஒரு பகுதியை மாத்திரம் பதிவு செய்துகொள்ளலாம்.
கேம் ஸ்டுடியோ 2.5 எனும் பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1.3 மெகாபைட் அளவு கொண்ட ஒரு சின்னஞ் சிறிய மென்பொருளான இதனை விண்டோஸின் எந்தப் பதிப்புடனும் நிறுவிக்கொள்ள முடியும்.
கேம்ஸ்டுடியோவை எதற்கெல்லாம்
பயன்படுத்தலாம்?
* எந்தவொரு பயன்பாட்டு மென் பொருளுக்கான டிமோ (Demo) வீடியோ காட்சிகள் மற்றும் பாடங் களை Tutorial)  உருவாக்க முடியும்.
* பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம்.
* கணினியில் தோன்றும் பிரச்சினைகளை வீடியோவாகப் பதிவு செய்து தொழில்நுட்ப வல்லுநர்களிடம் காண்பித்து அதற்கான தீர்வைப் பெறலாம்.
* கணினியில் அவ்வப்போது தெரிந்துகொள்ளும் புதிய விடயங்களை வீடியோவாகப் பதிவுசெய்து வைக்கலாம்.
மிகவும் எளிமையான இடை முகப்பைக் கொண்ட கேம்ஸ் டுடியோவை இயக் கும் விதத்தை ஓரிரு நிமிடத்திலேயே கற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. எங்காவது மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் உதவிக் குறிப்பும் தரப்படுகிறது.
கேம்ஸ்டுடியோ மென்பொருளை www.camstudio.org  எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 $type={blogger}:

Post a Comment

Item Reviewed: திரை அசைவுகளை வீடியோவாக படம் பிடிக்கும் CamStudio Rating: 5 Reviewed By: The life