நாளுக்கு
நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும்
பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத
பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை
உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை
மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக
நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற
இலவச மென்பொருளாகும். இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம் மற்றும் பயனும்
அதிகம் என்பதால் அனைவரும் இதை உபயோகிக்கின்றனர்.
புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில:
புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில:
- Windows8 கணினியிலும் சப்போர்ட் செய்யும் படி அமைத்து உள்ளனர்.
- Recycle bin ல் இருந்து குப்பைகளை நீக்குவதில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
- Thunderbird மென்பொருளில் Cache நீக்குவதில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
- Safari உலவியில் Browsing History Clean செய்வதில் இருந்த குறைகள் கலைப்பட்டுள்ளது.
- Office 2007 மற்றும் Office 2010 போன்ற மென்பொருட்களில் மூலம் உருவாகும் சில வேண்டாத பைல்களையும் நீக்குகிறது.
- Windows மற்றும் MAC கணினிகளில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.
- இந்த லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
உபயோகிக்கும் முறை:
- டவுன்லோட் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும்.
- உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
0 $type={blogger}:
Post a Comment