ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் முற்றிலுமாக நீக்க.
ஆண்டிவைரஸ்
மென்பொருள் கணினிக்கு அவசியமான ஒன்றாகும். வைரஸ்கள், மால்வேர்கள்,
ஸ்பைவேர்கள் மேலும் இன்னபிற தொல்லைகளில் இருந்து கணினியை பாதுகாக்கிறது.
ஆனால் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளின் உபயோகிக்கும் காலம் முடிந்து சிலர் வேறு
ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு மாறுவார்கள். அப்போது இப்போது உள்ள
மென்பொருளை நீக்கினால் தான் இன்னொன்றை நிறுவ முடியும். அந்த சமயங்களில் சில
ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் என்னதான் செய்தாலும் கணினியில் இருந்து
போய்த்தொலையாது.
நாம் Add/Remove Programs
சென்று முறைப்படி நீக்கினாலும் போகாது. அப்போது நாம் என்ன செய்வது? அந்தந்த
ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் நிறுவனத்திலேயே வழங்கப்படும் அழிப்பு மென்பொருளை
பயன்படுத்தி தான் கணினியிலிருந்து முற்றிலுமாக அழிக்க முடியும்.
சந்தையில்
பிரபலமாக உள்ள அனைத்து ஆண்டிவைரஸ் மென்பொருள்களையும் நீக்க ஒரே இடத்தில
அதன் சுட்டிகள் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்கிவிட்டு கணினியை ரீஸ்டார்ட்
செய்தால் போதும். உங்கள் கணினியில் சரியாக நீக்கப்படாத ஆண்டிவைரசின் தொல்லை
போய்விடும்
0 $type={blogger}:
Post a Comment