நாம்
இணையத்தில் இருந்து மென்பொருட்களையோ அல்லது சினிமா படங்கள் போன்ற பெரிய
பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவைகளை டோரென்ட் பைல்களாக டவுன்லோட்
செய்வோம். டோரென்ட் பைல்களில் இருந்து நம் கணினியில் நேரடியாக டவுன்லோட்
செய்ய முடியாது. அதற்க்கு பெரும்பாலானவர்கள் இந்த U Torrent மென்பொருளை
பயன் படுத்துகிறார்கள். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமான
மென்பொருளாகும். தற்போது இந்த மென்பொருளின் உள்ள வசதிகளை மேம்படுத்தி புதிய
பதிப்பாக 3.0(build 26473) இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மென்பொருளின் வசதிகள்:
மென்பொருளின் வசதிகள்:
- ஏதேனும் ஒரு வீடியோ அல்லது ஆடியோ பைலை டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போதே அந்த பைலை ஓபன் செய்து வீடியோ சரியாக இயங்குகிறதா என பார்த்து கொள்ளலாம்.
- இதனால் நாம் டவுன்லோட் செய்து கொண்டிருக்கும் போதே அந்த வீடியோ சரியாக இயங்க வில்லை அந்த வீடியோவின் தரம் பிடிக்கவில்லை என்றால் அப்பொழுதே அந்த டவுன்லோடை நிறுத்தி விடலாம். இதனால் நம் நேரமும் இன்டர்நெட் உபயோகமும் சேமிக்க படும்.
- இன்னொரு வசதி நாம் டவுன்லோட் செய்யும் வீடியோவுக்கு இந்த மென்பொருளிலேயே மதிப்பெண் (Ratings) கொடுக்கலாம். இதனால் தரம் குறைந்த வீடியோக்கள் தவிர்க்கப்படும்.
- மற்றும் நாம் டவுன்லோட் செய்யும் வீடியோவை மற்றவகளுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.
- இப்படி ஏராளமான வசதிகள் இந்த மென்பொருளின் பதிய பதிப்பில் வந்துள்ளது.
- முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- பின்பு வரும் .exe பைலை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை கணினியில் நிறுவுங்கள் .
- மென்பொருளை நிறுவும் போது கீழே உள்ள படங்களின் படி டிக் மார்க்கை நீக்கி விடவும்.
- இந்த இரண்டு படங்களில் உள்ள விண்டோ வரும்போது மட்டுமே இதில் உள்ள மாதிரியே டிக் குறியை நீக்கி விடவும்.
- மற்ற விண்டோக்களில் Next கொடுத்துக்கொண்டு செல்லலாம்.
- முடிவில் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இனைந்து விடும்.
- இனி இந்த மென்பொருளை பயன்படுத்தி இணையத்தில் இருந்து பைல்களை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இங்கு தரப்படும் DOWNLOADE LINKE களை CLICK செய்தால் வரும் WINDOW
வில் SKIP ADஎன்பதை CLICK செய்யவும்
0 $type={blogger}:
Post a Comment