728x90 AdSpace

  • Latest News

    Monday, October 8, 2012

    Computer Voice Control software for free குரல் மூலம் கணினியை செயல்படுத்தும் புதிய தொழில்நுட்பம்...


                                    
    நாம் சாதாரணமாக கணினியை இயக்க Mouse, மற்றும் keyboard வழியாகத்தான் கணினிக்கு கட்டளைகள் பிறப்பித்து பயன்படுத்துவோம்.

    அவ்வாறில்லாமல் கணினியில் விசைப்பலகை, சுட்டி ஆகியவற்றை தொடாமலேயே உங்கள் குரல் மூலம் உங்களது கணினியை செயல்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தைப் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

    தற்போது Tablet Pc, iphone, ipod, ipad, போன்ற சாதனங்களிலும் இந்த குரல் உணரி தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

    E-Speaking என்ற இந்த மென்பொருள் மூலம்  கட்டளைகள் பிறப்பிக்கும்போது, கணினி அதை உணர்ந்து, புரிந்துக்கொண்டு செயல்படுகிறது.

    E-Speaking என்ற இந்த மென்பொருள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்த, செயல்படுத்த உதவும் சில கட்டளைகள்:


    Close Application
    Close Document
    Close Window
    Maximize
    Minimize
    Open Email
    Open Excel
    Open Internet
    Open Notepad
    Open Powerpoint
    Start Email
    Start Excel
    Start Internet
    Start Notepad
    Start Powerpoint
    Start Word

    மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி இயக்கவிட்டு, இந்த கட்டளைகளை நீங்கள் உங்கள் ஹெட்போனில் பேசிப் பாருங்கள். என்ன நிகழ்கிறது?....
    நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்த விரும்பும்போது, கணினியில் open internet என கட்டளையிட வேண்டும். உடனே இன்டர்நெட் திறந்துகொள்ளும். பிறகு எந்த வலைத்தளத்திற்கு செல்ல வேண்டுமோ அதன் பெயரை உச்சரிக்க வேண்டும். உதாரணமாக google தளம் செல்ல google website  என உச்சரித்தால் போதுமானது. கூகிள் தளம் திறந்துகொள்ளும்.

    இதுபோல கணினியில் உள்ள அனைத்துப் பயன்பாடுகளையும் பயன்படுத்த, ஒவ்வொன்றிற்கும் பிரத்யேக கட்டளைகள் உள்ளன.


    இம் மென்பொருளை நிறுவ இந்த பக்கத்திற்கு செல்லவும்.

    இம்மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு சில முக்கியமான சிறப்புக் காரணங்கள்:

    1. பயன்படுத்த மிக எளிது.
    2. 100 க்கும் மேற்பட்ட கட்டளைகள் உள்ளடங்கிய கட்டமைப்பு
    3. மேலும் பல கட்டளைகளை இணைக்கும் வசதி
    4. மிகச்சிறிய அளவில் அமைந்த கோப்பு.
    5. Microsoft ன் சமீபத்திய தொழில்நுட்ப பயன்பாடு அமையப்பெற்றிருப்பது.
    6. MS-Office பயன்பாடுகள் உள்ளடங்கியிருப்பது.
    7. Mouse மூலம் செய்யும் வேலைகளுக்கும் கட்டளைகளை பிறப்பித்தல்
    8. SAPI மற்றும் .NET தொழில்நுட்பம்
    9. Windows 2000, Windows 7 இயங்குவது
    10. முற்றிலும் இலவசமானது

    1. Free Download of software
    2. Over 100 commands built-in
    3. Ability to add more commands
    4. Runs in Windows2000 and WindowsXP
    5. Small file size
    6. Utilizes latest technologies from Microsoft
    7. Seemlesly integrate with Office
    8. Voice commands of Mouse events
    9. Based on SAPI and .NET technologies
    10. Easy to Use
    மென்பொருளில் பயன்படுத்தக்கூடிய மேலதிக கட்டகளைக் கற்றுக்கொள்ள  இந்த உதவிப் பக்கத்திற்குச் செல்லவும்.
    மென்பொருளில், உதாரணமாக நீங்கள் MS-excel Application ஐ திறக்க Open Excel என கட்டளையிட்டால் போதும். Excel திறந்துகொள்ளும். அதில் பணிபுரிய Start Excel என கட்டளையிட்ட பிறகு நீங்கள் அதில் வேலைச் செய்யத்தொடங்கலாம்.
    இந்த வீடியோவில் பாருங்கள் மிகத் தெளிவாக காட்டியிருக்கிறார்கள். E-speaking Software மூலம் குரல்வழியே கணினியை செயல்படுத்தவும், கட்டுப்படுத்தவும், வேலைகள் செய்யவும் முடியும் என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். நீங்களும் முயற்சிக்கலாமே...!!! 


     




     https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqk52coMdzD3hV4X1N4w1uX1c90HCvuyiESbCDrR5W1cW-Lp7fkmiPZ5JiAE7uIffij5nzRuvmkmp_YTgzC3uoKl3TSigJpiu4QSP7kuzD5wVnfU5qNmm-es9E_R4KjkXQGVO1NBBJ1_I/s1600/adfly+ilshank.blogspot.com.png

                              https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTsDhJhJb-QmncmDweDj3qtxYbhs7YMYCnrm6pVn4m5DLdyvfCyX_7K5z9uRcO0zPt2VxswTH0KXFdD4XCuzQBIzpKAxsVp7HVbWfpLXsswIoMS879jDTSQNnMZyfjunhq6XUtpv5R8NI/s1600/playerbtd.gif
    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: Computer Voice Control software for free குரல் மூலம் கணினியை செயல்படுத்தும் புதிய தொழில்நுட்பம்... Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top