728x90 AdSpace

  • Latest News

    Tuesday, October 9, 2012

    லினக்ஸ் பயன்படுத்த அருமையான ஆறு காரணங்கள்!!

    இன்று கணிணி பயன்படுத்தும் பலரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான விண்டோஸ் இயங்குதளத்தையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதற்கு மாற்றாக இருப்பவை லினக்ஸ் இயங்குதளங்கள்.

    லினக்ஸ் இயங்குதளங்கள் பற்றிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. அறிந்திருக்கும் சிலரும் அதனைப் பற்றி முழுமையாகத் தெரியாததால் பயன்படுத்த தயங்குகிறனர்.

    நீங்கள் வீடுகளில் கணிணி பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால், லினக்ஸ் பயன்படுத்திப் பாருங்கள்!! வீட்டு கணிணிகளில் நீங்கள் ஏன் லினக்ஸ் பயன்படுத்த வேண்டும்?

    1. குறைந்தபட்ச வன்பொருள் தேவை (Low Hardware requirements):

    லின்கஸ் பயன்படுத்த அதிநவீன கணிணிகள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான இடங்களில் பழைய கணிணிகளே போதும். (RAM மட்டும் மாற்றினாலே போதும்!)


    வீட்டு கணிணிகளில் பெரும்பாலும் என்ன செய்கிறோம்? சில ஆவணங்கள் தட்டச்சவும், விளையாட்டுகள் விளையாடவும், பாடல்கள் கேட்பதும், புத்தகம் படிப்பதும், இணையத்தை வலம் வருவதும் தானே? அதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச வன்பொருள் தேவைகள் இதோ:

    இயங்குதளம்வெளியீடு நாள்செயலி வேகம்(Processor Speed)நேரடி அணுகு நினைவகம் (RAM)பயன்படுத்தாத வன்தட்டு அளவு(Hard disk Free Space)
    Windows 722 ஜூலை 20091 GHz1 GB16 GB
    Windows Vista30 ஜனவரி 20071 GHz1 GB15 GB
    Windows XP24 ஆகஸ்ட் 2001300 MHz128 MB1.5 GB
    Ubuntu 12.0426 ஏப்ரல் 2012300 MHz128 MB1 GB
    Fedora 1729 மே 2012400 MHz1 GB10 GB
    Open Suse 12.116 நவம்பர் 2011500 MHz1 GB3 GB
    Linux Mint 1323 மே 2012600 MHz1 GB1 GB

    2. நிறுவல் தேவைகள்:

    லினக்ஸ் இயங்குதளம் நிறுவுவதற்கு நிறுவல் மென்பொருளை நீங்கள் ஒரு குறுந்தட்டிலோ (CD), இறுவட்டிலோ (DVD) எழுதி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகபட்சம் 1GB காலி இடம் உள்ள Pendrive போதும். அதன் மூலமே நிறுவி விட முடியும்!!

    இயங்குதளத்தை நிறுவிய பின் அந்த நிறுவல் மென்பொருளைPendrive இருந்து அழித்து விடலாம்!! இதன் மூலம் தேவையின்றி ஒரு வட்டு வீணாக போகாது!

    மேலும், அந்த Pendrive முழுவதும் காலியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்படும் இடம் போக, மீதம் உள்ள இடத்தில் வேறு கோப்புகளை உங்கள் விருப்பப்படி சேமித்து வைக்கலாம்!!

    என்ன பாஸ்? ஒரு DVD என்ன விலை Pendrive என்ன விலை என்பவர்களுக்கு...

    உங்களிடம் தடையற்ற மின்சாரமும்  தடையற்ற இணைய இணைப்பும் இருந்தால், விரலி கூட தேவையில்லை!!! நேரடியாக இணையத்தில் இருந்து நிறுவி விடலாம்!!!

    முதல் முறை நிறுவுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீங்க?

    விண்டோஸ் என்றால் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகும்... ஆனால், லினக்ஸ் இயங்குதளங்களுக்கு அதிகபட்சம் 20 நிமிடங்கள் தான்!!

    3. மேம்படுத்தல்:

    ஏற்கனவே நிறுவி இருந்தால், அடுத்த பதிப்பு/ வெளியீடு நிறுவுவதற்கு நீங்கள் மொத்த கணிணியையும் அழிக்க (Format) செய்யத் தேவை இல்லை. மென்பொருள் மேலாளர் மூலம் நேரடியாக இணையத்தில் இருந்து மேம்படுத்திக் கொள்ளலாம் (Upgrade)!! உங்கள் கோப்புகளுக்கு ஒன்றும் ஆகாது!! வெளியீடு வந்தால் தானாகவே கணிணி உங்களுக்கு நினைவூட்டும்!!
    இதில் முக்கிய சிறப்பம்சம், மேம்படுத்தும் போது நீங்கள் வெறுமனே கணிணித் திரையினை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை!! உங்கள் விருப்பம் போல மற்ற வேலைகளைச் (பாட்டு கேட்பது, இணையத்தில் அலசுவது, புத்தகம் படிப்பது.. இப்படி) செவ்வனே செய்யலாம்!!!

    4.மென்பொருள்:

    அன்றாடம் நாம் செய்யும் பணிகளுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா? நிச்சயம் வராது!! எல்லாவற்றிற்கும் இணையான மென்பொருட்கள் உண்டு!! லினக்ஸ் இயங்குதளங்களில் அன்றாட பணிகளுக்கு இருக்கும் இயல்பிருப்பு மென்பொருட்கள் (Default Applications) இதோ:

    தேவைவிண்டோஸ்லினக்ஸ்
    இணையம்Internet ExplorerFirefox
    இணைய அரட்டைநிறுவ வேண்டும்Gwibber/ Empathy
    மின்னஞ்சல்Outlook (Trial version)Evolution
    பாடல் (இசை)Windows Media PlayerBanshee/ Rhythm Box
    ஒளி (வீடியோ)Windows Media PlayerTotem
    வட்டு எழுதுதல்MS writer/ Nero (நிறுவ வேண்டும்)K3B / Brasero
    படம் எடுத்தல்நிறுவ வேண்டும்Cheese
    அலுவல் பயன்பாடுகள்MS Office (நிறுவ வேண்டும்)Open Office/ Libre Office
    PDFAdobe (நிறுவ வேண்டும்)Evince

    இவற்றைத் தனியே நிறுவ வேண்டியதில்லை.. உங்கள் இயங்குதளம் நிறுவப்படும் போதே சேர்ந்து நிறுவப்பட்டு விடும்!!

    இதே போல பல பயன்பாடுகள் இருக்கிறன. தேவையெனில், நிறுவிக் கொள்ளலாம்!

    5. வன்பொருள் ஆதரவு:

    வழக்கமாக, நாம் எந்த உபகரணத்தையும் கணிணியுடன் இணைக்க குறுந்தட்டின் மூலம் நிறுவ வேண்டி இருக்கும்!!

    லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு அந்த கவலை இல்லை.. எல்லா உபகரணங்களும் Plug and Play மாதிரி தான்... இணைத்தால் தானே நிறுவிக் கொள்ளும்!!

    நான் இதுவரை பயன்படுத்திய ஒலி சாதனங்கள் (Audio), அச்சு இயந்திரம் (Printer), படக்கருவி (Webcam) என்று எதற்கும் எதையும் நிறுவியதில்லை!! இது இணைய இணைப்பிற்கும் பொருந்தும்..

    நீங்கள் இணைய இணைப்பை இணைத்திருந்தால் போதும்.. தானாக இணையத்தில் இணைத்து விடும்!!

    6. வைரஸ்:

    லினக்ஸ் நிறுவி இருந்தால், உங்கள் கணிணிக்கு காய்ச்சல் (அதாங்க வைரஸ்) என்பதே வராது. அதற்கென்று தனியே ஆண்டி வைரஸ் என்கிற பெயரில் எதையும் நிறுவ வேண்டியதில்லை!!!

    அடிக்கடி ரிப்பேர் செய்யாமல், பலத்த பாதுகாப்பு கிடைக்கும்!!

    இவை அனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒன்று உண்டு..

    Windows தளம் நிறுவ நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் (அல்லது Pirate செய்ய வேண்டும்)...

    ஆனால், பல லினக்ஸ் இயங்குதளங்கள் நிறுவ நீங்கள் கட்டணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை!!அவற்றை எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் எடுத்து, யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. எந்த பிரச்சனையும் இல்லை!!
    தயக்கத்தை விட்டு வீட்டில் லினக்ஸ் பயன்படுத்திப் பாருங்க!! அப்புறம் நீங்களே சொல்வீங்க!! 

                                          Ubuntu 12.04 ஐ இலவசமாக தரவிறக்க  


     https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTsDhJhJb-QmncmDweDj3qtxYbhs7YMYCnrm6pVn4m5DLdyvfCyX_7K5z9uRcO0zPt2VxswTH0KXFdD4XCuzQBIzpKAxsVp7HVbWfpLXsswIoMS879jDTSQNnMZyfjunhq6XUtpv5R8NI/s1600/playerbtd.gif 

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqk52coMdzD3hV4X1N4w1uX1c90HCvuyiESbCDrR5W1cW-Lp7fkmiPZ5JiAE7uIffij5nzRuvmkmp_YTgzC3uoKl3TSigJpiu4QSP7kuzD5wVnfU5qNmm-es9E_R4KjkXQGVO1NBBJ1_I/s1600/adfly+ilshank.blogspot.com.png 

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI9PQtBFRDlbN7TNWh7EXUtPYMwwUpvyGs4sTbh9An2bxr-5Q4IQJoylAOpD25WmrCQcRKpFC1-5XwTe-A8JqEpT3aPoAg7DZlwS9P85tCYkbQdpvi5RJI4gziu_7jPxoWq3KGNHEUc5E/s1600/adfou.png

    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: லினக்ஸ் பயன்படுத்த அருமையான ஆறு காரணங்கள்!! Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top