உக்கிரைன், பெலருசு போன்ற சில நாடுகளில் ஆப்பெரா புகழ் பெற்ற திரைப்பலக உலாவியாக விளங்குகின்றது. திசம்பர் 2011 தரவுகளின்படி ஆப்பெரா மினியே மிகவும் புகழ் பெற்ற நகர்வலையுலாவியாக உள்ளதுடன் பெரும்பாலான நகர்பேசிகளில் அவற்றின் தயாரிப்பாளர்களால் இயல்புநிலை ஒருங்கிணைவலையுலாவியாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தத்தல் உலாவல், பக்கத்தைப் பெரிதாக்குதல், சுட்டிக் குறிகாட்டல்கள், ஒருங்கிணைந்த பதிவிறக்க முகாமை மென்பொருள் ஆகிய வசதிகளை ஆப்பெரா கொண்டுள்ளது. ஏமாற்றுப் பரப்புகை, தீப்பொருள் ஆகியவற்றிலிருந்தான உள்ளமைப் பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுகளை அழிப்பதற்கான வசதி (எ-டு: மீயுரைப் பரிமாற்ற நெறிமுறை நினைவிகளை அழித்தல்) போன்ற பாதுகாப்பு வசதிகளும் ஆப்பெராவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் விண்டோசு, மாக்கு இயங்குதளம் எக்கு, இலினக்கு, விரீபி. எசு. தி. ஆகிய இயங்குதளங்கள் உள்ளடங்கலாகப் பல்வகைப்பட்ட தனியார் கணினி இயங்குதளங்களில் ஆப்பெரா ஓடுகின்றது. மேமோ, பிளாக்குபெரி, சிம்பியன், நகர்விண்டோசு, அண்டிராயுடு, ஐ. இயங்குதளம் ஆகிய இயங்குதளங்களிலும் யாவாத் தள நுண்பதிப்பிலும் இயங்கும் கருவிகளுக்கும் ஆப்பெராப் பதிப்புகளைப் பெற முடியும். ஆப்பெரா உலாவியானது ஏறத்தாழ 12 கோடி நகர்பேசிகளுடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. நிண்டெண்டோ தி. எசு., வீ ஆகிய ஆட்ட முறைமைகளுக்கான ஒரேயொரு வணிக வலையுலாவி ஆப்பெராவேயாகும். சில தொலைக்காட்சி மேலமைபெட்டிகளும் ஆப்பெராவைப் பயன்படுத்துகின்றன. அடோபி ஆக்கத் தொகுதியில் பயன்படுத்துவதற்கு அடோபி முறைமைகள் ஆப்பெராத் தொழினுட்பத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
0 $type={blogger}:
Post a Comment