728x90 AdSpace

  • Latest News

    Sunday, November 17, 2013

    GIMP 2.8 Free Download Full Version

    கிம்ப் (GIMP.. அல்லது GNU Image Manipulation Program) என்பது 'அடோப் ஃபோட்டோஷாப்' மென்பொருளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும். ஆனால் இது ஃபோட்டோஷாப்பின் நகல் இல்லை. இது பல்வேறு இயக்கத்தளங்களில் அதாவது லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் போன்றவற்றில் இலவசமாக நிறுவிப் பயன்படுத்தலாம்.


    வரலாறு

    ஒவ்வொரு மென்பொருள் தயாரிப்புக்கும் ஒரு வரலாறு இருக்கும் அதுபோல கிம்ப் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஸ்பென்சர் கிம்பால் மற்றும் பீட்டர் மேட்டிஸ் என்ற இரண்டு நண்பர்களும் ஒரு வரைகலை மென்பொருளுக்கான நிரலை எழுத தீர்மானித்தார்கள். அதில் ஒருவருக்கு வரைகலையில் அனுபவம் இருந்தது. எனவே அவர்களின் இந்த வரைகலை உருவாக்கம் திட்டம் நன்றாக வந்தது. அவர்களை பேராசியர் ஃபார்சித் என்பவர் ஊக்குவித்து, அந்த மென்பொருளில் வரவேண்டிய பிற புதிய வசதிகளை பற்றியும் அவர்களுக்கு விளக்கினார். அது வளர வளர அதற்கு General Image Manipulation Program அல்லது சுருக்கமாக GIMP என அழைத்தனர். இவ்வாறு உருவான கிம்ப் ஜனவரி 1996 இல் முதல் முறையாக பொது வெளியீடாக GIMP பதிப்பு 0.54 வெளியிடப்பட்டது.

    கிம்பில் பிளக்கின் எனப்படும் கூடுதல் இணைப்பு முறைமை பின்பற்றுவதால் மென்பொருள் உருவாக்குபவர்கள் தனித்தனி நிரல்களாக இணைத்து கொள்ளலாம். இது வரையும் பொருட்கள் மற்றும் சேனல் செயல்பாடுகள் போன்ற அடிப்படை செயல்முறையை கொண்டுள்ளது. இவ்வாறு உருவான கிம்ப்பில் சில சிக்கல் இருந்தது, பல ப்ளக்கின் இருப்பதால் அவை ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தது. எனவே அடிக்கடி க்ராஷ் ஆகியது. எனினும் அதன் பயணம் இனிதாகவே இருந்தது. இதனை உருவாக்கிய அந்த பல்கலை நண்பர்கள் அதன் வெளியிட்டதும் பொது உருவாக்குபவர்களுக்காக ஒரு மின்னஞ்சல் குழுவை உருவாக்கினர். அதாவது அந்த மின்னஞ்சல் குழு உருவாக்க முக்கிய காரணம் அதில் பலர் தங்கள் மறுமொழியை தெரிவிப்பார்கள், அது சம்பந்தமான சந்தேகங்களை கேட்பார்கள், அதனை மேம்படுத்துவதற்கான வழியை சொல்லுவார்கள் என்பதே அதன் நோக்கமாகும்.
    ஆனால் அந்த மின்னஞ்சல் குழுவால் பல சிக்கல் ஏற்பட்டது. அதன் பயனர்கள் மற்றும் உருவாக்குபவர்களுக்கிடையே சில சம்பந்தமில்லாத வினாக்கள் எழுந்தன. எனவே 1996 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி கிம்ப் மின்னஞ்சல் குழு கிம்ப் பயனர் குழு என்றும் கிம்ப் டெவலப்பர் குழு எனவும் பிரிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கிம்ப் இணைய தளம் உருவாக்கப்பட்டது. கிம்ப் பயனரில் ஒருவர் கிம்பிற்கான கையேட்டை உருவாக்கினார். இவ்வாறு ஒவ்வொரு பதிப்பிலும் மெருகேறி கிம்ப் இன்று 2.4 என்ற பதிப்புக்கு முன்னேறியுள்ளது.

    கிம்பின் வசதிகள்

    கிம்ப் மென்பொருளை எடுத்து கொண்டால் அதில் பல வசதிகள் மற்றும் கருவிகள் உள்ளன. கிம்ப்பில் உள்ள கருவிகள் கருவிப்பட்டைகள், மெனு மற்றும் உரையாடல் பெட்டிகள் மூலம் கையாளப்படுகிறது. அதில் ஃபில்டர்கள், ப்ரஷ்கள், தேர்ந்தெடுத்தல், லேயர், மாஸ்கிங் கருவி, வெட்டும் கருவி என பல கருவிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக பார்த்தால் கிம்ப்பில் 48 ப்ரஷ்கள் உள்ளன. அதே போல நமக்கு வேண்டிய அளவில் நாமே ப்ரஷை உருவாக்கியும் கொள்ளலாம். அந்த ப்ரஷே கடின ஓரமாகவும், மென்மையான ஓரமாகவும், அழிக்கக்கூடியதாகவும், வெவ்வேறு ஒளி அளவிலும் என பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம்.

    அடோப் போட்டோஷாப்புடன் ஒரு ஒப்பீடு

    இன்று அடோப் என்றாலே எல்லோருக்கும் தெரியும். அது ஒரு மிக வலிமையான வரைகலை மென்பொருட்களின் பிராண்ட். இதிலிருக்கும் போட்டோஷாப் மென்பொருளுக்கு மாற்ற சில சமயங்களில் கிம்ப் இருக்கிறது என்று சொல்லலாம்.
    ஆனால் இவற்றுக்கு இடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக பார்த்தால், போட்டோஷாப் கிம்ப்பிலுள்ள சில ப்ளக்கின் அல்லது ஸ்கிரிப்ட்களுக்கு ஏற்றதாக இல்லை. அதே போல கிம்ப்பும் பலவற்றுக்கு துணைபுரிவதில்லை அல்லது குறைந்த அளவே துணைபுரிவதாக இருக்கிறது.
    கிம்ப்பின் சொந்த கோப்பு முறைமையான XCF போட்டோஷாப்பினால் துணைபுரிவதில்லை. ஆனால் போட்டோஷாப்பின் சொந்த கோப்பு முறைமையான PSD மற்றும் பிற கோப்பு முறைமைகளும் கிம்பால் துணைபுரிகிறது. மேலும் கருவிகள் என எடுத்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையே பல கருவிகள் ஒரே மாதிரியான வேலையை செய்கிறது. சிலவற்றுக்கு பெயர் மட்டும் வேறுபடுகிறது.
    கிம்ப்பும் போட்டோஷாப்பும் அவற்றின் நிற மேலாண்மை வசதிகளில் வேறுபடுகின்றன. போட்டோஷாம் 16, 32 பிட் மற்றும் Pantone நிற முறைமை அல்லது ஸ்பாட் நிறங்கள் மற்றும் CMYK, CIE XYZ போன்றவற்றுக்கு துணைபுரிகிறது. ஆனால் கிம்ப் Pantoneக்கு சில சட்டரீதியான பிரச்சனைகளால் துணைபுரிவதில்லை மற்றும் இது அடிப்படை CMYKக்கு துணைபுரிகிறது.
    மேலும், போட்டோஷாப்பால் துணைபுரியும் பல கருவிகள் மற்றும் வசதிகளுக்கு கிம்ப் துணைபுரிவதில்லை. லேயர்களை ஒழுங்குப்படுத்தல் (இங்கு லேயர்கள் ஃபில்டர்கள் போல செயல்படுகிறது), லேயர் பாணிகள், டெக்ஸ் பிளிண்டிங் (நிழலிடுதல் மற்றும் ஒளிர்தல்), ஹிஸ்டர் ப்ரஷ் கருவி, லேயர் சாளரத்தில் கோப்புறைகள் என பல வசதிகள் கிம்ப்பில் இல்லை
    http://www.gimp.org/downloads/ 










    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: GIMP 2.8 Free Download Full Version Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top